BREAKING NEWS

வார விடுமுறை காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…

வார விடுமுறை காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…

 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் நிலவி வருகிறது. கோடை சீசன் முன்னிட்டு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் ரம்ஜான் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக இங்குள்ள இயற்கை காட்சிகளையும், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட சமவெளி பிரதேசங்களை தொலைநோக்கி கருவி மூலம் கண்டு ரசித்தனர்.

மேலும் மலை சிகரத்தில் உள்ள சூசைட் பாயிண்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS