வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…
இரண்டாவது முறையாக மலை ரயிலின் கழுகு பார்வையை வெளியிட்டது தென்னக ரயில்வே…
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவி வருகிறது. இச்சமயங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் வரை உள்ள இயற்கை காட்சிகளையும், வன விலங்குகளையும், நீர்வீழ்ச்சிகளையும், மலைமுகடுகளையும் குழந்தை போல் தவழ்ந்து வரும் மலை ரயிலில் ரசித்தபடி பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வந்த மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் மலை ரயில் முன்பு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இதனிடையே மலை ரயில் சிறப்பம்சங்கள் குறித்து இரண்டாவது முறையாக கழுகு பார்வையை வெளியிட்டுள்ளது தென்னக ரயில்வே.