விக்கிரமசிங்கபுரத்தில் ஆசிரியர் தின விழா.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலபானபுரம் அமலில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
இதில் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களை அதிகம் பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக கல்லிடைத் திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பண்டார சிவன் அனைவரையும் வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளியில் அதிக மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேரன் மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார் சேரன் மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ரெஜினி
மற்றும் ஆக்னஸ் சாந்தி வழக்கறிஞர் ஜோசப் ஆரோக்கியராஜ்,
வி.கேபுரம் வர்த்தக சங்கத் தலைவர் சில்வர் ராமசாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முக்கூடல் சொக்கலால் பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி சங்கர் அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அருள்மேரி அம்பை அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை மேரி மார்க்கிரட் ஆகியோர் உட்பட 95 தலைமை ஆசிரிய ஆசிரியைகருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
முடிவில் மன்னார்கோவில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் நன்றி கூறினார்.