BREAKING NEWS

விஜய் டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா…!

விஜய் டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா…!

நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் ராமர், ஒரு அரசு அதிகாரியாகவும் இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்டாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ராமர். இதையடுத்து பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நகைச்சுவை நடிகராக பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

குறிப்பாக அது இது எது நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை ஷோவை கிண்டலடித்து இவர் பண்ணிய பேசிய ‘என்னம்மா இப்படி பண்றீங்களே மா’ என்கிற டயலாக் அவரை பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆக்கியது.

கிருஷ்ணவேனி என்பவரை திருமணம் செய்துகொண்ட ராமருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மதுரையை அடுத்த மேலூர் தான் ராமரின் சொந்த ஊர். இவர் சில படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இவை மட்டும் தான் ராமர் பற்றி இதுவரை மக்களுக்கு தெரிந்தவை.

ஆனால் அவர் ஒரு அரசு அதிகாரியாகவும் இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. மதுரையைச் சேர்ந்த எம்.பி சு.வெங்கடேசன், நகைச்சுவை நடிகர் ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

 

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்” என பதிவிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமே மக்களால் அறியப்பட்ட ராமர், ஒரு பொறுப்புமிக்க அரசு அதிகாரி என்பதை அறிந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )