BREAKING NEWS

விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்ட

விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில்,  இன்று உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்ட

 

விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், ஏப்ரல் 20 (2024 )ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில் விநாயகர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை பூஜை நடைபெற்றது.

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி திரைப்படம், தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றி வாகை சூடும் படமாக மாறியது வித்யாசாகர் இசையில் அப்படிப் போடு’ உள்ளிட்ட எல்லா பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது இந்நிலையில் தற்போது விஜய் நடித்த கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்துஇப்படத்தினை வரவேற்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி சார்பில் விநாயகர் கோவிலில் விசேஷ பிரார்த்தனை செய்யப்பட்டு கில்லி திரைப்பட பேனருக்கு மலர் தூவி தேங்காய் உடைத்து திருவள்ளூரில் அமைந்துள்ள ராக்கி திரையரங்குக்கு வருகை புரிந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

மேலும் இப்படத்தை குறித்து  மாவட்ட தலைவர் குட்டி அவர்களிடம் கேட்டபோது கில்லி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டது ரசிகர்களிடையே மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் திரைப்படத்தை காண குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரையரங்குக்கு வருகை புரிவதனால்
மீண்டும் கில்லி திரைப்படத்திற்கு வெற்றி வாய்ப்பை தருவதாக தெரிவித்தார்

நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிகழகம் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில் பொறுப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவரும்
பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS