விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ரபீக் தலைமையில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இந்நிகழ்வில் கடந்த 30 ஆம் தேதி கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதைத் தொடர்ந்து
தேனி அல்லிநகரம் நகராட்சியில் கடந்த காலங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் பல நூற்றாண்டுகளாக இருந்த புளிய மரங்களை வெட்ட அனுமதித்த நெடுஞ்சாலைத்துறை கண்டித்தும் வெட்டிய மரங்களில் அருகில் புதிய மரக்கன்றுகள் நட்டு அதன் பராமரிக்க வேண்டும் என்றும்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தோறும் நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை நடத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல்.
பெரியகுளம் நகராட்சி பட்டாளம்மன் கோவில் தெருவில் வருகின்ற வராக நதியின் வரக்கூடிய நீரில் கழிவுநீர் கலந்து தெருக்களில் செல்கிறது இதை சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுச் சுவர் கட்டி மேலும் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட வேண்டும் என்றும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார் மற்றும் பெரியகுளம் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.