விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம்.
விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம் சிறுவயதில் சிறு பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியாக இந்த வகுப்புகள் நடைபெறுவதாக ஆலய குருவானவர் பேச்சு.வருடம் தோறும் மே மாதங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கால வேதாகம வகுப்பு என்று அழைக்கப்படக்கூடிய விபிஎஸ் வகுப்பு நடத்தப்படுவது வழக்கம் அதன்படி இன்று தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் இணை பேராலயமாக விளங்கக்கூடிய தூத்துக்குடி வடக்கூர் பேட்ரிக்ஸ் தூய பேட்டரிஸ் இணைப்பேராலயத்தில் விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு துவங்கியது.
இதில் சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மாணவ மாணவிகளும் மூன்று வயது முதல் 18 வயது உடைய மாணவ மாணவிகள் அனைவரும் பங்கு பெற்று சிறுகதைகள் வேதாகம வசனங்கள் பாடல்கள் நடனங்கள் என பல்வேறு வகைகளில் தங்களது தாழ்ந்துகளை வெளிப்படுத்தி பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றனர் இந்த பயிற்சி வகுப்பானது இன்று முதல் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இறுதி நாளில் இவர்கள் அனைவரையும் வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதும் இறுதி நாள் மாலையில் நாடகம் நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் இந்த பயிற்சி வகுப்பின் மூலம் சிறுவயதில் சிறு பிள்ளைகளை இந்த மே மாத வெயிலின் தாக்கத்தில் வெளியில் நின்று விளையாடி உடல் நல கோளாறு ஏற்படாத வண்ணம் பாதுகாத்து அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாகவும் ஆலய குருவானவர் செல்வின் துரை தெரிவித்தார்.