விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்
சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் சென்னை காவல் ஆணையர்
சந்திப் ராய்ரத்தோர் இன்று காலை 11 மணி அளவில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது காவல் நிலையம் சம்பந்தப்பட்ட போலீஸ் பூத்துக்கள் ,சட்டம் & ஒழுங்கு , குற்ற வழக்குகள் அது சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை கோப்புகள், காவல் உதவி மைய அழைப்புகள் சரிபார்ப்பு மற்றும் ரோந்து செல்லும் பைக் உள்ளிட்ட வாகனங்களை பார்வையிட்டு அதனை குறித்து காவல் நிலைய காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார்.இந்த தீடீர் ஆய்வின் போது மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ராமாபுரம் காவல் நிலைய ஆய்வுக்கு பின் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வுக்கு கிளம்பி சென்றார். மேலும் நேற்று சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வாகன தணிக்கை மற்றும் குற்ற சம்பவங்களின் போது பிடிபட்ட வாகனங்களை காவல் நிலையத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பைக்குகளை அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெகன், மணி, சத்திய பிரபு, உள்ளிட்ட மூன்று பேர் காவலர்களே திருடி விற்பனை செய்தது தெரியவந்த நிலையில் அவர்களை கோயம்பேடு துணை ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தீடிரென சென்னை காவல் ஆணையர் அதிரடி ஆய்வு மேற்கொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.