விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு , விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் மாசிமகம், ஆனி திருமஞ்சனம், ஆடி திருப்பூரம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்கள் வெகு விமரிசயாக நடைபெறும்.
அந்த வகையில் விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
ஆலய சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு விருத்தாம்பிகை சன்னதியில் உள்ள கொடிமரத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
மேலும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மன் வீதியுலா நடைபெறும்.
தொடர்ந்து வரும் 06ம் தேதி தேரோட்டம், 07ம் தேதி அம்மன் ஸ்படிக பல்லக்கு, 08ம் தேதி ஆடிப்பூர முக்கிய விழாவான திருக்கல்யாணம் நடைபெறுகிறது.