அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, காவல் கிணற்றில் அஇஅதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் ந.மணிகண்டன்
திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு பகுதியில், சொத்து வரி மின் கட்டணம் விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசை கண்டித்து, அஇஅதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை அம்மா பேரவை துணைச் செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பால் துறை, மாவட்ட இணை செயலாளர் ஞானப் புனிதா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார்,
மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கமலா பாண்டியன் பணகுடி பேரூர் கழக சார்பாக கழகத் துணைச் செயலாளர் ஜோ.பி.ஜெகன் சீனிவாசன், கவுன்சிலர் ஆட்டோ மணி, பாலசுப்பிரமணியன், பந்தல் ராஜ், ராசையா நாடார், செந்தில்குமார், ராஜன்,
முத்துக்குமார், ராம்குமார், ராஜலிங்கம், சிவன் ராஜா, ராஜ மணி,மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.