விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த – கியூ பிரிவு போலீசார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார்
அங்கு சென்று பார்த்ததில், கலைஞானபுரம் கடலுக்கு செல்லும் வழியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த TN69 BQ 9901 என்ற வாகனப்பதிவெண் கொண்ட மகேந்திரா பிக்கப் லோடு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 44 மூட்டைகளில் சுமார் 1300 கிலோ பீடி இலைகள் இருந்ததும்,அவை இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் லாரியின் ஓட்டுனரான தூத்துக்குடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சூரியகுமார் என்பவரை கைது செய்து 1.3 டன் பீடி இலைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் இந்திய மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்றும், அதன் இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.