BREAKING NEWS

விளையாட்டு செய்திகள்

எந்த வீரரும் தன் நிலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை ன்று வீரர்களுக்கு ஊக்கமும் தைரியமும் அளித்தார் ரோஹித் சர்மா.

12வது நேரடியான தொடர் டி20 வெற்றிகள் என்ற சாதனையை நிகழ்த்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியில் எந்த வீரரும் தன் நிலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று வீரர்களுக்கு ஊக்கமும் தைரியமும் அளித்தார்.

இந்த தொடர்கள் நிறைய நம்பிக்கைகளை தனக்கு அளித்திருப்பதாகவும் வீரர்கள் தங்கள் அணியில் இடம்பெறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் போராடுவது தனக்கு நிறைய நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்றார் ரோஹித் சர்மா.

நேற்று தரம்சலாவில் இலங்கையை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்த நிலையில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா கூறியதாவது.

அதாவது இது அனைத்தும் ஒரு வகையின் கீழ் ஒன்றாக வருவதாகும். நாங்கள் ஒன்றாக விளையாடினோம், நன்றாக விளையாடினோம். இந்தத் தொடரில் இருந்து நிறைய நம்பிக்கையான விஷயங்கள் கிடைத்துள்ளது.

பெஞ்சில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது நல்லது. சில நேரங்களில் நாங்கள் அதில் பின்வாங்கினோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் அணியில் உங்கள் இடங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை சக வீரர்களிடம் சொல்வது முக்கியம்.

நம்மிடம் உள்ள இடைவெளிகளை நிரப்ப விரும்புகிறோம். நாம் முன்னேற விரும்புகிறோம். இது ஒரு பெரிய சவாலாக இருக்கும் ஆனால் ஃபார்மில் இல்லை என்பதை விட பார்மில் வீரர்கள் ள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களில் சிலர் வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக்கியது போல மற்றவர்களும் வாய்ப்பைப் பயன்படுத்தினால், நீங்கள் வலிமையிலிருந்து வலிமைக்கு செல்லலாம்.

மொஹாலியில் மார்ச் 4-ம் தேதி தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இரு அணிகளும் இப்போது தயாராகின்றன. அணியை கட்டுமானம் செய்து 2022 டி20 உலகக்கோப்பை 2023 50 ஒவர் உலகக்கோப்பைக்காக ஒரு அணியை உருவாக்க ரோஹித் சர்மா முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி – சாஸ்திரி ஆட்சியில் மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ், அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமலேயே ஒழித்தது நினைவுகூரத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )