விளையாட்டு செய்திகள்
இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. மேலும் இப்போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார் . அதன்படி முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100-வது போட்டி ஆகும்.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ரோஹித் சர்மா 29 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வாலும் 33 ரன்னில் வெளியேறினார்.இதன்பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரசிகர்களின் கரகோஷங்களுடன் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.அவருடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்திய இதன்மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்இழப்புக்கு 109 ரன்களை எடுத்துள்ளது.இந்திய அணி தரப்பில் விராட் கோலி 15 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.