விளையாட்டு செய்திகள்
கிரண் குமார் போட்ட ஸ்கெட்ச்… முன்ணனி வீரர்களி சுருட்டிய டெல்லி அணி.. மீதம் இவ்வளவு தொகை உள்ளதா?
பெங்களூரு: மெகா ஏலத்தின் முதல் நாளன்று டெல்லி அணிக்காக சிறப்பாக வீரர்களை தேர்வு செய்த நபரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏனென்றால் அந்த அணி ஏலத்திற்கு வரும் அனைத்து வீரர்களை ஏலம் கேட்டது மட்டுமின்றி சிறந்த தொகைக்கு வாங்கவும் செய்துள்ளது.
கிராந்தி அனைத்து அணிகளும் முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க முற்பட்ட போதும் டெல்லி அணி குறுக்கிட்டது. அந்த அணியின் உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி முடிந்தவரை ஒருவீரரின் ஏலத்தொகையை ஏற்றிவிட்ட பின்பு சைலண்டாக ஓரம் சென்றார். இதனால் பல அணிகளும் தங்களுக்கு வேண்டும் என நினைத்த வீரர்களை அதிக தொகை கொடுத்து வாங்க நேரிட்டது.
ரசிகர்கள் விமர்சனம் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரசிகர்கள், யார் அந்த கிராந்தி இப்படி எல்லா வீரரையும் ஏலம் கேட்டால் என்ன ஆவது. அவசரப்பட்டு பணத்தை வாரி வழங்க ரிஸ்க் எடுக்கின்றனர் என விமர்சனங்களை அள்ளி வீசனர். ஆனால் மற்றொருபுறம் சிறந்த அணி தேர்வாளர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
சிறந்த வீரர்கள் ஏலம் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்தனரோ அதே அளவிற்கு சிறந்த பட்ஜெட்டில் வீரர்களையும் ஏலம் எடுத்து வைத்துள்ளது. டேவிட் வார்னர் (ரூ.6.25 கோடி) மிட்செல் மார்ஷ் ( ரூ6.50 கோடி), சர்ஃபராஸ் கான் ( ரூ.20 லட்சம், ஷர்துல் தாக்கூர் ( ரூ.10.75 கோடி), கே.எஸ்.பரத் ( ரூ.2 கோடி) அஷ்வின் ஹெப்பர், அக்ஷர் , முஸ்திஃபிசூர் ரஹ்மான் (ரூ.2 கோடி) , கம்லேஷ் நாகர் கோட்டி ( ரூ.1. 1 கோடி) , குல்தீப் யாதவ் ( ரூ.2 கோடி),
ஆச்சரியம் தரும் தொகை இத்தனை முன்னணி வீரர்களை எடுத்த பின்னரும் அந்த அணியிடம் இன்னும் ரூ. 16.50 கோடி மீதமுள்ளது. இன்றைய ஏலத்திலும் அதே போன்ற திட்டத்தை பயன்படுத்தி பல சிறந்த வீரர்களை குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.