BREAKING NEWS

விளையாட்டு செய்திகள்

மார்ச் 26-ல் ஐபிஎல் ஆரம்பம்: 2 குரூப்களாக அணிகள் பிரிப்பு- சிஎஸ்கே, ஆர்சிபி ஒரே பிரிவில்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2022) ஆட்சி மன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அணிகளின் இரு குரூப்களை அறிவித்தது. மேலும் ஐபிஎல் 15வது தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, மே 29ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும். மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச தரநிலை மைதானங்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்படும். பிளேஆஃப் போட்டிகளுக்கான இடம் பின்னர் முடிவு செய்யப்படும்” என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

10 அணிகள் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் (7 ஹோம் மேட்ச்கள் மற்றும் 7 வெளி மேட்ச்கள்) மொத்தம் 70 லீக் ஆட்டங்களில் விளையாடும். அதைத் தொடர்ந்து 4 பிளேஆஃப் ஆட்டங்கள்.

அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன, குழுவுக்கு 5 அணிகள் ஒரு அணி மற்ற 4 அணிகளை எதிர்த்து இருமுறை ஆடும் (8 போட்டிகள்) ஒன்று தங்கள் மண்ணில் இன்னொன்று வெளியே. மற்ற பிரிவில் உள்ள 4 அணிகள் ஒருவரை எதிர்த்து ஒருவர் ஒரு போட்டியில் ஆட வேண்டும்.

குரூப் ஏ-யில், மும்பை இந்தியன்ஸ் அணி கேகேஆர், ராஜஸ்தான், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோஅணிகளுக்கு எதிராக தலா 2 போட்டிகளை விளையாடும். அதே சமயத்தில் மும்பை அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும், ‘பி’ பிரிவில் உள்ள மற்ற அணிகளுக்கு எதிராக தலா 1 போட்டியிலும் விளையாடும். இதேபோல், பி- பிரிவில் ஆர்சிபி அணி தலா 2 ஆட்டங்களில் சிஎஸ்கே, சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத்துக்கு எதிராக விளையாடும். ஆர்சிபி அணி ஏ- பிரிவில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும், பிறகு பிரிவு ஏ-இல் உள்ள மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியிலும் விளையாடும்.

குரூப்கள்

குரூப் ஏ – மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), டெல்லி கேபிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி)

குரூப் பி- சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் குஜராத் டைட்டன்ஸ்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )