விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள், புள்ளி மான்கள்: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் குருமலை ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 கிராமங்களில் உள்ள விளைநிலங்களை காட்டு பன்றிகள் மற்றும் புள்ளிமான்கள் சேதப்படுத்தி அனைத்து பயிர்களும் சேதம் அடைந்துள்ளதாகவும்,..
கடந்த ஒரு வார காலமாக இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. என்றும் குற்றச்சாட்டி இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து பத்து ஊர்களில் உள்ள பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.
உடனடியாக காட்டுப் பன்றிகளையும் புள்ளிமான்களையும் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்து வனப்பகுதிகளில் விட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இல்லையெனில் 10 ஊர் மக்கள் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும்,
குமாரபுரம் முதல் குருமலை வரை நிரந்தர முள்வேலி அமைத்து கிராம மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்து சென்றனர்.