விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் மாயனூர் சமுதாயக்கூடம் .மண்டபத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது..
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்.கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி சுந்தரி துவக்கி வைத்தார்.
சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும்பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப்பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் 2024-25 ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாயில், 22 இடங்களுடன் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திட்டத்தின் மூலம் பல்வேறு விவசாயிகள் பயன்பெறலாம் இன்றைய விளக்க உரையை ஏற்படுத்தினார்கள் திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது .50 சதவீதம் மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.திட்டத்தின் மூலம் ஆன்லைன் மூலமாக
பயன்பெறலாம்.
அரிய வகை திட்டத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர். சிவகாமசுந்தரி
பேசினார்.விவசாய பெருமக்களுக்கு அரசு மானியத்தின் வழங்கப்பட்ட விதைகள் , தென்னங்கன்னு நாற்று, பழ செடிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.