BREAKING NEWS

விவசாய நிலத்தில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்திவந்த டிப்பர் லாரி பறிமுதல்

ஆண்டிபட்டி அருகே விவசாய நிலத்தில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்திவந்த டிப்பர் லாரி பறிமுதல் . ஓட்டுநரை கைது செய்து மதுரை மண்டல சுங்கம் மற்றும் புவியியல்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளில் வைகை ஆற்றுக் கரை ஓரம் விவசாய நிலங்களில் அரசு அனுமதி இன்றி மணல் கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கி விற்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது
இதையடுத்து மதுரை மண்டல சங்கம் மற்றும் புவியியல் துறை துணைஅலுவலர் பிரவீன்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் ஆண்டிபட்டி வருஷநாடு சாலையில் திடீர்சோதனை மேற்கொண்டனர்
அப்போது வருசநாடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரியை விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர்
அதில் டிப்பர் லாரியில் உரிய அரசு அனுமதி இன்றி மணல் கடத்தப்பட்டு வந்ததை கண்டறிந்து
அந்த லாரியை காணா விலக்கு காவல் நிலையத்தில் கொண்டு சென்று 3 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர்
மேலும் லாரி ஓட்டுனர் ஆதி என்பவரை கைதுசெய்து கானா விலக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அரசு அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் மணல் கடத்தலை தடுக்க ஆண்டிபட்டி பகுதியில் திடீர் சோதனைகள் தொடரும் என சுங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS