வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த 38 தங்க சவரன் 76 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏவிடி நகர் கரிக்கல் ரோடு பகுதியில் வசித்து வரும் டில்லி பாபு .இவர் டிவிஎஸ் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவர் குடும்பத்துடன் அரக்கோணம் அருகே உள்ள வியாசபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்றுள்ளனர்.டில்லி பாபுவின் மனைவி விஜயலட்சுமி லட்சுமி நரசிம்மர் கோவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் . இவர் நேற்று மாலை பணி முடித்து விட்டு 5.45 மணிக்கு வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த 38 தங்க 76 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இது கொண்டபாளையம் போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் அரக்கோணம் ஏஎஸ்பி கிரிஷ்யாதவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்தனர்.கைரேகை நிபுணர் கொண்டு கை ரேகை படிவம் எடுத்தனர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.