வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை- பணம் கொள்ளை அடித்த இரண்டு பெண்கள்- இரண்டு ஆண்களை கைது செய்த போலீசார்..
திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே உள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் துளசிராமன் இவர் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் கடந்த மாதம் 29ஆம் தேதி வேலை சம்பந்தமாக சென்னைக்கு சென்றுள்ள இந்நிலையில் இவரது வீட்டில் மனைவி, மற்றும் மகள், தனியாக வசித்து வருகின்றனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து இவர்கள் வீட்டு அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வெயில் அதிகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர் தண்ணீர் கொடுத்தவுடன் வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உங்கள் வீட்டு பகுதியில் சற்று ஓய்வெடுத்து பின்பு செல்வதாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோர்கள் வீட்டின் முன்பக்கம் அமர்ந்துள்ளனர்.
அப்பொழுது வீட்டின் பின்புறம்மாக துளசிராமனின் மனைவி மற்றும் மகள்கள் கால்நடைகளுக்கு உணவு அளிக்க சென்றுள்ளனர்,
அப்பொழுது வீட்டு கதவு திறந்திருப்பதை கண்டவுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த ஒரு ஆண் இரண்டு பெண்களும் வீட்டிற்கு உள்ளே சென்று பீரோவில் இருந்த நான்கு சவரன் நகை, மற்றும் நான்காயிரம் ரூபாய் பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு உள்ளே வந்து பார்த்த துளசிராமனின் மனைவி பிரோ திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இது குறித்து திருவாலங்காடு போலீசாரிடம் துளசிராமன் புகார் அளித்துள்ளார் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் ராஜகோபால் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பார்த்தபோது பேரம்பாக்கம் அருகில் உள்ள இருளஞ்சேரி சார்ந்த பிரியதர்ஷினி, கண்டம் பாளையத்தை சேர்ந்த வினிதா, தக்கோலத்தை சேர்ந்த ஆனந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்கள்தான் கட்டட தொழிலாளி துளசிராமன் வீட்டில் நகை பணம் திருடியவர்கள் என்று விசாரணையில் உறுதி செய்து இவர்களை கைது செய்து, இவர்களிடமிருந்து நான்கு சவரன் நகை, திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய விலை உயர்ந்த இரண்டு மோட்டார் சைக்கிள் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இந்த இரண்டு பெண்களை மற்றும் இரண்டு ஆண்களையும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்….