BREAKING NEWS

வெட்டிய மரத்திற்கு தீனி எதற்கு என சொத்தை அபகரித்து வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்

வெட்டிய மரத்திற்கு தீனி எதற்கு என சொத்தை அபகரித்து வீட்டை விட்டு வெளியேற்றிய மகன் குறித்து தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 75 வயதான இவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் தட்சிணாமூர்த்தி இவரை பராமரிப்பதாக கூறி அவரை ஏமாற்றி தந்தை பெயரில் இருந்த சொத்துக்களை தான செட்டில்மெண்ட் பெற்றுள்ளார்.

மேலும் தந்தையை பராமரிக்காமலும்,உணவு மருத்துவம் போன்ற எந்த உதவியும் செய்யாமல் வீட்டை விட்டும் வெளியேற்றியுள்ளார்.

தற்பொழுது பண்ருட்டி அடுத்த காராமணிக்குப்பம் வெள்ளகேட் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் யாசகம் கேட்டு சாப்பிட்டு வரும் நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் சந்தித்து மனு அளித்தார்.

அதில் தன்னிடமிருந்து பெற்றுக் கொண்ட சொத்தை மீட்டு தர வேண்டி மனு அளித்த நிலையில் மனுவை பெற்ற ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

Share this…

CATEGORIES
TAGS