BREAKING NEWS

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வங்கியின் மூலம் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வங்கியின் மூலம் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் முன்பாகவே 100 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் பதிவாகி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் காலை 10 மணிக்கே உச்சி வெயில் வாட்டி எடுத்து வருகின்றது.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆகி வருகின்றனர் இதன் காரணமாக வேலூர் பெங்களூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக வங்கியின் மேலாளர் அமீர் மற்றும் வங்கியின் ஊழியர்கள் ஒன்றிணைந்து வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள தண்ணீர் பந்தல் திறந்து வைத்து அதில் தண்ணீர் தர்பூசணி மோர் என வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கினர்

வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தண்ணீரின்றி தவித்து வரும்போது மக்களுக்கு உங்களால் முடிந்தவரை கடைக்கு முன் தண்ணீர் வைக்குமாறு கேட்டுக்கொண்டார் .

கத்திரி வருவதற்கு முன்பாகவே சுமார் 107.4. டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் கானல் நீர் வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனல் காற்றால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக பகல் நேரங்களில் வேலூரின் முக்கிய பிரதான சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெளிச்சோடி காணப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS