BREAKING NEWS

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் உயர் மின் விளக்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை 

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் உயர் மின் விளக்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்றம்ப்பள்ளி தாலுக்கா வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமம் உள்ளது.

இந்த கிராமமானது சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தை ஒட்டி அடந்த வனப்பகுதி அமைந்துள்ளது.

இந்த கிராமத்தின் வழியே பல முக்கிய பகுதிகளுக்கு சாலை இணைப்பு உள்ளது.

லட்சுமிபுரம் கிராமத்தின் கூட்டுசாலையில் நெடுஞ்சாலை ஒட்டி உள்ள பகுதியில் மினி உயர்மின் விளக்கு(Mini High Mass light) அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

இதன் தொடர்பாக ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வெலக்கல்நத்தம் ஊராட்சி செயலாளர் அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக பல கோரிக்கை பொதுமக்கள் விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மத்திய மாநில அரசின் 15 வது நிதி மானிய குழு மூலம் மினி உயர்மின் விளக்குஸஅமைக்க கோரிக்கை விடுத்தும் இந்நாள் அன்று வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தப் பகுதியானது அடந்த வனப்பகுதி ஒட்டி வருவதால் பல காட்டு விலங்குங்கள் இரவு நேரங்களில் நடமாடுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை சோதனை சாவடி மையமும் இங்கே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து லட்சுமிபுரம் கிராமம் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை கூட்டு சாலையில் உயர் மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் இன்று சமூக ஆர்வலர் நந்திராஜன் கோரிக்கை மனு விடுத்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய கள விசாரணை மேற்கொண்டு உயர்மின் விளக்கு அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS