வெல்பென் மற்றும் மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
வெல்பென் மற்றும் மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய ஓட்டுநர்களுக்கு இலவச கண் மற்றும் STI,RTI பரிசோதனை முகாம்
தரங்கம்பாடி, ஜூலை – 23:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் & ஹெல்த் அண்ட் நாலேஜ் நிறுவனம், மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் சார்பில் கண் பரிசோதனை குழு மற்றும் தொற்று நோய், பாலியல் நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அடுத்து டி மணல்மேடு கிராமத்தில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஹெல்த் & நாலேஜ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். (CSR) திட்டத்தின் கீழ் மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் RTI & STI மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆக்கூர் மருத்துவமனை மருத்துவ குழுவினர் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சியில் தரங்கம்பாடி ரோட்டரி சங்கத் தலைவர் மாணிக்க அருண்குமார், ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் 60 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதில்
வெல்ஸ்பன் சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி, மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் திட்ட இயக்குனர் இராமர் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.