BREAKING NEWS

வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

 

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள என். நாரையூர் கிராமத்தில் கஞ்சா, மது, ஹான்ஸ், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களால் அடிமையாகி இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

 

 

இதனை தடுக்கும் பொருட்டு வேப்பூர் காவல்துறை மற்றும் என். நாரையூர் ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போதைப் பொருள் தடுப்பு குறித்தான போதைப் பொருளை ஒழிப்போம் சமுதாயத்தை காப்போம் என்ற பதாகை ஏந்தி கிராமம் முழுவதும் பேரணியாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார், வேப்பூர் காவல் நிலைய தலைமை காவலர் எழிலரசன், திமுக ஒன்றிய துணைச் செயலாளரும், கிளைக் செயலாளருமான கனல் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

மேலும் ஊராட்சி செயலாளர் கொளஞ்சி, விசிக நிர்வாகி பெரியசாமி, கிராம முக்கியசர்கள் சடையமுத்து, பெரியசாமி, சம்பத்குமார், முனியமுத்து, சத்யராஜ், சடையமுத்து கிராம இளைஞர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )