வேலூரில் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஓட்டேரியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சதகத்துல்லா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புதிய யுக்திகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்போது அவர் உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரனிடம் கோடை முடியும் வரை குடிநீர் விநியோகம் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.