வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் மற்றவர்கள் சொல்வது போல் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வது தெளிவாக தெரிகிறது
வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வேலூர் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன், அமுலு விஜயன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்ச துரைமுருகன் கூறியதாவது
காங்கிரஸ் கட்சிக்கு 1,823 கோடி வரி நிலுவை குறித்து தேர்தல் சமயத்தில் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு
இதற்கு காங்கிரஸ் கட்சியே பதில் அளித்து விட்டது என்னிடம் கேட்டு இதற்கு என்ன பிரயோஜனம் என்றார்
அதற்கு உரியவர்கள் பதில் கூறி விட்டார்கள் அதற்கு குறைவாகவோ மிகையாகவோ கூறக்கூடாது என்றார்
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் செய்கிறார்கள்.
அவர்கள் ஆளுங்கட்சியினர்
அரசு அவர்கள் கையில் கையில் உள்ளது அதன் மூலம் அவர்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்
அதற்கு நாம் என்ன செய்ய முடியும் அதற்கு மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சியினர்கள் கேட்டால் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் வழங்கப்படுகிறது
எதிர்க்கட்சியினர் ஏற்கனவே பயன்படுத்திய சின்னமாக இருந்தாலும் அவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது
இதனால் மற்றவர்கள் சொல்வது போல் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது தெளிவாக தெரிகிறது என கூறினார்
