BREAKING NEWS

வேலூரில் மன்சூர் அலிகான் அலுவலகத்தில் உள்ள பதாகைகள், கொடுகளை அகற்றிய பறக்கும்படையினர்

வேலூரில் மன்சூர் அலிகான் அலுவலகத்தில் உள்ள பதாகைகள், கொடுகளை அகற்றிய பறக்கும்படையினர்

வேலூரில் மன்சூர் அலிகான் அலுவலகத்தில் உள்ள பதாகைகள், கொடுகளை அகற்றிய பறக்கும்படையினர்

உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை என அதிகாரிகள் விளக்கம்

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் அண்மை காலங்களாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்களை சந்தித்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார். இதற்காக சத்துவாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வ.உ.சி நகரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளார்.

இதற்க்கு உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அலுவலகம் எதிரே வைக்கப்படுள்ள பேனர், கட்சிகொடிகளை அகற்ற தேர்தல் பறக்கும் படையினர் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் கொடிகள் அகற்றப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS