BREAKING NEWS

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பிறகு கீழே இறக்கப்பட்ட சிறார் கைதிகள்.

 ஏற்கனவே ரகளையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்க வேண்டும் என மீண்டும் ரகளையில் ஈடுபட்டதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி.

வேலூர் மாவட்டம் வேலூர் காகிதபட்டறை ஆற்காடு சாலையில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இடம். இதில் 16 வயது முதல் குற்ற செயல்களில் ஈடுபடும் தமிழகம் முழுவதும் உள்ள இளம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி 6 பேர் தப்பியோடிய நிலையில் அதில் 5 பேர் பிடிபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து அடுத்த நாளான 28-ம் தேதி பாதுகாப்பு இடத்தில் A பிளாக்கில் இருந்த இளம் கைதிகள் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்த மின்விசிறி, நாற்காலி, மிக்சி, விளையாட்டு உபகரணங்கள், தட்டு உள்ளிட்டவற்றை உடைத்தனர்.

இது தொடர்பாக 12 பேர் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 2 முறை தங்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதாகவும் உடனடியாக தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கூறி இன்று (14.03.2023) மாலை சுமார் 7.30 மணிக்கு பாதுகாப்பு இடத்தில் இருந்த சிலர் கட்டிடத்தின் மீது ஏறி தொடர் ரகளையில் ஈடுபட்டு, துணிகளை கொளுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் 5 பேர் தப்பியோடியுள்ளனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு இட பாதுகாவலர்கள், காவல் துறையினர் இணைந்து அடுத்த அரை மணி நேரத்தில் 5 பேரையும் மடக்கி பிடித்து ஒப்படைத்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி ரேஜேஷ் கண்ணண், DRO ராமமூர்த்தி உள்ளிட்டோர் ரகளையில் ஈடுபட்ட இளம் சிறார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறக்கினர். பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அளித்த பேட்டியில், உடைமைகளை சேதப்படுத்தியதாக 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இன்றும் அவர்கள் ஜாமினுக்காக போன நிலையில் அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

இதில் சட்டத்தின் கடமை தான் செய்து வருகிறார்கள் ஆனால் இவர்கள் தங்களுக்கு ஜாமின் வேணும் என்பதற்காக மேலே ஏறி அடம் பிடித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள்.

பின்னர் நானும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி எச்சரிக்கை விடுத்த பிறகு கீழே இறங்கி வந்தார்கள் அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

யாரும் இங்கிருந்து தப்பி செல்லவில்லை அனைவரும் உள்ளே தான் இருக்கிறார்கள் என கூறினார்.

CATEGORIES
TAGS