வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சத்தியமங்கலம் ஊராட்சி, கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாமாக குடிநீர் பிரச்சனை நிலவி வருவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் பொது மக்களிடம் சமரசம் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்
இந்த சாலை மறியலால் சிறிது நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பெரும் பரபரப்பு காணப்பட்டது