வேலூர் கணாதிபதி துளசி’ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, கணியம்பாடி கணாதிபதி துளசி’ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா (GTEC) கல்லூரி அறங்காவலர் சி.குஷால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு கிளவுட் பிளாட்பார்ம் சர்வீஸ் எரிக்சன் இந்தியா லிமிடெட் தலைவர் முரளி பரமசிவம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், துணை போராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்று பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தனர்.