வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்கு வரும் புதிய அதிகாரிகளுக்கு விருந்து வைக்கும் அரசியல்வாதி!
வேலூர் தாலுகா காவல் நிலையம் கணியம்பாடி பகுதியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் புதியதாக பணியிட மாறுதலில் வரும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர்கள் உள்ளிட்ட காவலர்களுக்கு இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பாமக பிரமுகரும், இந்நாள் திமுக பிரமுகருமான ராஜ்குமார் விருந்து வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி காவல் நிலையம் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தொடர்ந்து பறைசாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவரை கண்டும் காணாமல் காவலர்கள் விட்டு விடுவதாக ஒரு அதிர்ச்சி தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காவல் நிலையம் மாவட்டத்தின் எல்லை பகுதியில் இருப்பதால் இங்கு என்ன நடக்கிறது என்பது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைப்பதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாத்துமதுரையில் ராஜ்குமாரின் சொந்த ஜிம் என்ற உடற்பயிற்சி கூடத்தில் புதியதாக பணிக்கு வரும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சக காவலர்களுக்கு மது விருந்து உள்ளிட்ட கறி விருந்து வைத்து அழகு பார்க்கிறார் இந்த அரசியல்வாதி ராஜ்குமார் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி ஒரு புதிய கவனிப்பு நடந்தவாறு உள்ளது என்கின்றனர் இந்த பகுதி பொதுமக்கள். ஊரில் திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இவர்தான் அதற்கு தலைமை வகிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக இவர் தனது பிடியில் 20க்கும் மேற்பட்ட நபர்களை வைத்துக்கொண்டு ஆட்களை கடத்துவது, மிரட்டுவது மற்றும் பல பஞ்சாயத்துகளை நடத்துவது என்று பல அநாகரீக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இது எவ்வகையில் சாத்தியப்படுகிறது என்பது தற்போது வேலூர் தாலுகா காவல் ஆய்வாளராக உள்ள சுபாவுக்கே வெளிச்சம். இது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் மற்றும் வேலூர் சரக டி ஐ ஜி ஆகியோரின் காதுகளுக்கு எட்டியதா? எட்டவில்லையா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு நிலைமை படு மோசமாக உள்ளது என்று சொல்லலாம். இந்த காவல் நிலையத்தில் அப்படி ஒரு சிதம்பர ரகசியம் புதைந்து காணப்படுகிறது என்பதும் நிதர்சன உண்மை. தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர்கள் என்று நியமிக்கப்படும் அதிகாரிகள் அவர்கள் அவர்களுடைய வேலையை பார்க்காமல் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி சமூகவிரோதிகளுக்கு கைக்கூலிகளாக, கொத்தடிமைகளாக பணியாற்றி வருவது வெட்கக்கேடான விஷயமாக உள்ளது.
காவல்துறையில் பணியாற்ற சற்றும் தகுதியற்ற இது போன்ற நபர்கள் காவல்துறையில் இருப்பது எவ்வகையில் நியாயம் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். பொதுமக்களும் இதே கேள்வியை தற்போது கேட்க ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் நடைபெறும் இந்த அட்டூழியங்களை, அநியாயங்களை மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் மாவட்ட க்ரைம் மீட்டிங்கில் இதுகுறித்து விவாதித்து களைகளை களைய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் முன் வருவாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவரது வேலையை வழக்கம்போல் பார்ப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த செய்தி கூட காவல்துறையின் நலன் கருதி வெளியிடப்படுகிறது என்பதுதான் உண்மையிலும் உண்மை என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.