வேலூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…
வேலூர் மாநகர திமுக சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்தது. வேலூர் மாநகர செயலாளரும், எம்எல்ஏவுமான கார்த்திகேயன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர் மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட அவை தலைவர் முகமது சகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுமக்கள் வரிசையில் வந்து பழங்கள் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகியும், சுவைத்தும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.