வேலூர் பாகாயம் ரோட்டரி சங்க 6வது தலைவர் பொறுப்பேற்பு!
வேலூர், ஆக.4-
வேலூர் பாகாயம் ரோட்டரி சங்கத்தின் 6வது தலைவராக செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக 3231 மாவட்ட ஆளுநர் ராஜன் பாபு, கௌரவ விருந்தினராக பெட்ஸ் சேர்மன் டாக்டர் சிவக்குமார், உதவி ஆளுநர்கள் அப்துல் சுக்கூர், நிர்வாகம் தரணி வாசன், மண்டல செயலாளர் தேவி, சங்கச் செயலாளர் மோகன், பொருளாளர் புருஷோத்தமன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்