BREAKING NEWS

வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூர் மக்கான் கன்சால்பேட்டையில் மேம்பாலம் வருவதை ஒட்டி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அங்கிருந்த குடிசைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வந்த நிலையில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து ஜே. சி .பி. இயந்திரத்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் உருவானது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அதிரடி பிரவினர் வரவழைக்கப்பட்டனர்.. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சாலை மறியல் தொடர்ந்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைத்து அந்த பகுதியில் அமைதியை நிலைநாட்டினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS