BREAKING NEWS

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் அடுத்த சன்பீம் தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளி வாகன ஆய்வு, வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி, 22 தனியார் பள்ளிகளின் 223 பள்ளி வாகனங்களை ஆய்வு பணியை தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், காட்பாடி வட்டாட்சியர் சரவணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம் (வேலூர்), ராஜேஷ் கண்ணா (குடியாத்தம்), சிவராஜ், போக்குவரத்து பறக்கும் படை ஆய்வாளர் துரை, தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் (காட்பாடி), அரசு (குடியாத்தம்), அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் வாகன ஓட்டிகள் நடத்துனர் உட்பட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS