BREAKING NEWS

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் புறம்போக்கு நிலங்களை பட்டா செய்து தருவது, அரசு நிலங்களை ஆட்டையை போடுவது, வேண்டப்பட்டவர்களுக்கு பதிவு செய்து கொடுப்பது என பணத்தை வாங்கிக் கொண்டு இந்த சார் பதிவாளர்கள் பொறுப்பில் இருந்த நித்தியானந்தம், சிவக்குமார் ,குமரன் உள்ளிட்டோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதனால் காட்பாடியில் பணம் கோடிக்கணக்கில் கைமாறத் தொடங்கியது. தினமும் அலுவலகம் முடிந்து இரவு 10 மணி, 11 மணி என அலுவலகத்தை பூட்டி விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் இந்த சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தம். இது குறித்த தகவல்கள் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்ற வண்ணம் இருந்தது. குறிப்பாக காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவுக்காக வரும் பொதுமக்கள் கசக்கி பிழியப்பட்டனர்.

 

இது குறித்த புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு சென்ற வண்ணம் இருந்தது என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காவல்துறையினரையும் பொதுமக்களை போலவே பணம் கொடுத்தால் வேலையை முடித்து தருகிறோம் என்ற ரீதியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார் பதிவாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை இந்த வேலையை செய்ய துணிந்தனர். இது குறித்த தகவல்கள் புகார்களாக குவியத் தொடங்கின.

இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்ய புகுந்தனர். அப்பொழுது காட்பாடி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மற்றும் ஒரு செய்தியாளர் இதில் அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. இதில் அந்த செய்தியாளர் வெளியில் அனுப்பப்பட்ட நிலையில் உள்ளே இருந்த கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

அவரவர்கள வைத்திருந்த செல்போன்கள் பறிக்கப்பட்டன. இந்த அதிரடி சோதனை 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதில் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்கள் பல லட்சம் சிக்கியது என முதல் தகவலாக தெரிவித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் .இன்னமும் தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் இறுதி கட்டமாக எவ்வளவு தொகை சிக்கியது என்பதை தெரிவிப்பதாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் அதிரடி சோதனை காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் கலக்கமடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS