வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் 3 ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு போலீசார் அதிரடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் தொடர்ந்து காய்ச்சப்படுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து வேலூர் எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் படி
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை அவர்களின் தலைமையிலான போலீசார் ஆனந்தகிரி வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டு அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த சுமார் 2,700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் 120 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் இது கீழே ஊற்றி அழித்தனர்.
அதேபோல் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் ருக்மான்கதன் அவர்களின் தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த சுமார் 1,100 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 40 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை கீழே ஊற்றி அழைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இரண்டு மலைப்பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 3800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் 160 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.