வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் கடந்த மாதம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.