வைரலாகும் நயன் விக்கி திருமண அழைப்பிதழ்?!!

தமிழ் திரையுலகில் கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து காதலித்து கொண்டிருக்கும் காதல் ஜோடி விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது முதல் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இருவரின் திருமணம் குறித்து கடந்த ஆண்டு பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக தெரிவித்தார். ஆனால் திருமணம் குறித்து அனைவருக்கும் முன்னதாகவே வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் இவர்களது திருமண பத்திரிக்கை வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இவர்கள் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த அழைப்பிதழ் முக்கியமான விஐபிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா