ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு!
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
கணியம்பாடியில் சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும்.
இதில் தொடர்ந்து பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்து வருவது வழக்கம். இந்நிலையில் பிரதோஷ சிறப்பு பூஜை மாலை வேளையில் மிகவும் சிறப்புடன் நடந்தது. ஶ்ரீசோமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து ஶ்ரீசோமநாதீஸ்வரர் உற்சவ நாயகர் கோயிலை வலம் வந்து அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரதோஷ சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நித்யகுமார் செய்திருந்தார்.