ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 1008 பால்குட ஊர்வலத் திருவிழா
பண்ருட்டி தெற்கு சாத்திப்பட்டு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 1008 பால்குட ஊர்வலத் திருவிழா!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தெற்கு சாத்திப்பட்டு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து 1008 பால்குடம் எடுத்து வந்தனர்.
மேளதாளம் முழங்க ஊரின் முக்கிய வீதி வழியாக பெண்கள் ஊர்வலமாக வந்து கோவிலை வந்து அடைந்தனர்
அதன் பிறகு ஶ்ரீ மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது
பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
CATEGORIES கடலூர்