BREAKING NEWS

ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

திருச்சி திருவெறும்பூர் அருகே 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சி என் ஐ டி கல்லூரி முன்பு ஸ்கேட்டிங் ராலி தேசிய ஒற்றுமை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 50க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்,

இந்நிகழ்ச்சியினை திருச்சி திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார், திருச்சி மாவட்ட காவல்துறையினரிடம் முறையே அனுமதி பெற்று மிகுந்த பாதுகாப்புடன் திருவெறும்பூர் சரக காவல் துறையினர் ஒத்துழைப்புடன் ஸ்கேட்டிங் அணிந்து கொண்டு வீரர்கள், வீராங்கனைகள் சாலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்துடன் ஸ்கேட்டிங் ராலி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியினை செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில், செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பொதுச்செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் தமிழ்நாடு பயிற்சியாளர் அமல் ஜோயல் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பான முறையில், பாதுகாப்புடன் மிகுந்த விவேகத்துடனும் மாணவ மாணவிகளிடம் எழுச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி நடைபெற்றது,

நிகழ்ச்சியின் முடிவில் வாழவந்தான் கோட்டையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியோர்களுக்கு
இரவு உணவு வழங்கி மகிழ்ந்தனர்,

நிகழ்ச்சியில் வீரர்கள், வீராங்கனைகள் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS