ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஸ்ரீ சீதளதேவி மாரியம்மன் கோயில் 21 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது.
நெடுவாசல் ஊராட்சியில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி நிகழாண்டு 21 ஆம் ஆண்டு தீமிதி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கரகம், பால் காவடி, அலகு காவடி எடுத்து வந்து தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.