BREAKING NEWS

ஹாஜி கர்த்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் நிறுவனரின் 66 வது நினைவு நாள் தின நினைவஞ்சலி பேரணி

 

 

 

ஹாஜி கர்த்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் நிறுவனரின் 66 வது நினைவு நாள் தின நினைவஞ்சலி பேரணி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி 1956 ஆம் ஆண்டு முகமது மீரான் அவர்களால் ஏழை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் துவங்கப்பட்டது

இக்கல்லூரியின் நிறுவனரான முகமது மீரா அவர்கள் கிராமப்புறத்தை சார்ந்த ஏழை மக்கள் உயர்கல்வி கற்க கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும் என்று விரும்பிஅதன்படி உத்தமபாளையத்தில் கல்லூரி ஒன்றை நிறுவும் முயற்சியில் முழுமூச்சியில் ஈடுபட்டு
அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர்,தமிழ்வேள், பி.டி.ராஜன் அன்றைய கல்வித்துறை இயக்குனர் சுந்தர வடிவில் ஆகியோரை சந்தித்து கல்லூரி தொடங்குவதற்கான அங்கீகாரத்தை பெற்றார்

மேலும் கிராமப்புறத்தில் தொடங்கப்பட்ட எட்டாவது கல்லூரி ஆகவும் இது திகழ்ந்தது 120 மாணவருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லூரியில் தற்போது 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள்

கடந்த 68 ஆண்டுகளாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வரும் ஏழை விவசாய மக்களுக்கும் உயர்கல்வி அளிப்பதில் இக்கல்லூரி அரும் பணியாற்றி வருகிறது

இக்கல்லூரி படிப்படியாக சமீப காலத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் (A++)என்ற சிறந்த தர மதிப்பை பெற்றது

சிறந்த மனித நேயராகவும்,இறை பற்றாளராகவும்,சமூக நல்லிணக்க நாயனாகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் வாழ்ந்தவர்

1954 ஆம் ஆண்டு உத்தம்பாளையம் அரசு மருத்துவமனை மகப்பேறு மையம் அமைத்திட தனது சொந்த செலவில் கட்டிடங்கள் கட்டி கொடுத்தார்

மாமனிதரின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லூரியின் செயலாளர் மட்டும் தாளாளர் தர்வேஷ் முகைதீன்,கல்லூரியின் ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் குழு உறுப்பினர்கள் கல்லூரியின் முதல்வர் ஹச். முகமது மிரான்,கல்லூரியின் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று நினைவிடத்தில் என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை உடன் மலர் வளையம் வைத்து குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

CATEGORIES
TAGS