BREAKING NEWS

026-இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுரை

2026-இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கழக உறுப்பினர்களுக்கு திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுரை.

திருவாரூரில் அதிமுக மாவட்ட செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியது..

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி வரவேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் பார்த்துக் கொள்வார். 2026-இல் வலிமையான கூட்டணியை பொதுச் செயலாளர் அமைப்பார்.
2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பது யாராலும் தடுக்க முடியாது. திருவாரூர் மாவட்டத்தில் அஇஅதிமுக வென்றது என்ற நிலையில் நீங்கள் ஏற்படுத்தி தர நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை காமராஜ் வழங்கினார். பின்னர் திருவாரூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அதிமுகவில் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வரவேற்பு அளித்தார்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகி ராம், ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

CATEGORIES
TAGS