BREAKING NEWS

1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி நேரமாக காத்திருக்கும் வயதான பெண்மணி

கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில்
நியாய விலை கடையில் பாமாயில் பருப்பு இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் – கடையில் போதிய பணியாளர் இல்லாததால் காலதாமதமாக வழங்கப்படும் உணவுப் பொருள்கள் 1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி நேரமாக காத்திருக்கும் வயதான பெண்மணி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பாரதி நகர் பகுதியில் 2000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பாரதி நகர், சாஸ்திரி நகர், போஸ் நகர், பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அமுதம் நியாய விலை கடை மூலம் 1600 ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அக்கடைக்கு எடையாளர் நியமிக்க படாததாலும், கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் மிஷினில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக நாள் ஒன்றுக்கு 15 நபர்களுக்கு மட்டுமே அரிசி பருப்பு, பாமாயில் சர்க்கரை விநியோகம் செய்யப்படுகிறது.. மேலும் ஊழியர் ஒருவரே பதிவு செய்வதும் பொருட்களை வழங்குவதாலும் மிகவும் காலதாமதம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பருப்பு இருப்பு இருந்தால் பாமாயில் வரவில்லை பாமாயில் இருந்தால் பருப்பு வரவில்லை என்று கூறி அப்பகுதி மக்களை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

ஒரு பாமாயில் என்னைக்காக 4 மணி நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்படுவதாகும் அப்பகுதியைச் சேர்ந்த வயதான பெண்மணி வேதனையுடன் தெரிவிக்கிறார்.

கூடுதலாக மேலும் ஒரு நியாய விலை கடை அமைக்கப்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும் எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக இவ் விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS