10ம் வகுப்பில் முதலிடம் பெற்றவருக்கு நினைவு பரிசு.

சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்479 பெற்ற எம். ஜெயலட்சுமி அவர்களுக்கு நினைவு பரிசும் ஊக்க தொகையும் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினமேலும் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் ஜெயலட்சுமி அவர்கள் வீட்டிற்கு மின்சார வசதி கடந்த ஆண்டு மின்சார அலுவலகத்தில் பேசி அவர்கள் வீடு இருக்கும் இடம் வரை அரசு செலவிலேயே மின்கம்பம் அமைத்திட அனுமதி பெற்றுக் கொடுத்தார்.
ஆனால் அந்த ஊர் பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை தங்களுக்கு சொந்தமான இடம் என்று சொல்லி அந்த இடத்தில் மின்கம்பம் நட்ட விடாமல் தடுத்து விட்டார்கள்.ஆனால் மாணவி ஜெயலட்சுமி அவர்கள் தன்னுடைய விடாமுயற்சியால் படித்து இன்று பள்ளியில் முதல் மாணவியாகவும் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் .இன்று அவர் அவருடைய தகப்பனாருடன் வருகை தந்தார்.மேலும் சிவ பத்மநாதன் மனைவி மணிமேகலை அவர்கள் அந்த பெண்ணுக்கு கணிதஆசிரியர் ஆவார். கணித ஆசிரியரிடம் வாழ்த்து பெற வருகை தந்த போது அவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்தி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி ஊக்க தொகையும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் சிறப்பித்தார்கள்.
நிகழ்வின் போது கணிதஆசிரியர் மணிமேகலை ஆசிரியர் அண்ணாதுரை மாவட்ட தொண்டரணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் ஜெயலட்சுமியின் தந்தை முத்தையா , அருணா பாண்டியன் உள்ளிட்ட கழகநிர்வாகிகளும் கலந்து கொண்டனர் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ஜெயலஷ்மி அவர்களிடம் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நான் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று கூறினார் .அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.