BREAKING NEWS

100 நாள் வேலை பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ரத்தினகிரி அடுத்த சாம்பசிவபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் தோன்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்ததாவது குடியிருப்பு பகுதியில் அருகாமையில் குளம் தோண்டப்படுவதால் அப்பகுதியை சேர்ந்த சிறிய பிள்ளைகள் குளத்தில் மூழ்கி விபத்து ஏற்படும் என தெரிவித்து குளத்தை தோண்டப்படும் இடத்தை மாற்ற வேண்டுமென தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 100 நாள் வேலை திட்டத்தின் மேற்பார்வையாளர் மற்றும் ரத்தினகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குளம் தோன்டும் இடத்தினை மாற்றம் செய்து போராட்டத்தினை கைவிட செய்தனர்

CATEGORIES
TAGS