100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முறையாக வேலை மற்றும் ஊதியம் வழங்காமல் அதிகார தோனியின் பணியாளர்களை மிரட்டுவதாக தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி மன்ற தலைவரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு அடுத்து சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 100 நாள் வேலை செய்யக்கூடிய பெண்கள் ஆற்காடு ஆரணி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாள் வேலையில் ஈடுபடும் பெண்கள் தெரிவிக்கையில் சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முறையாக பணியினை வழங்குவதில்லை எனவும் மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி ஆற்றியதற்கான வருகை பதிவேடுகளில் கையொப்பம் பெற்று முறையாக பராமரிப்பது இல்லை எனவும் ,நான்கு வாரத்திற்கு மேலாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றியதற்கான ஊதியத்தினை வழங்காமல் இருந்து வருவதாகவும் மேலும் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்க சென்றாள் ஊராட்சி மன்ற தலைவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை தரை குறைவாக பேசுவதோடு அவர்களை பணியில் இருந்து எடுத்து விடுவதாக தெரிவித்து மிரட்டி வருவதாக குற்றச்சாட்டினை முன்வைத்து ஊராட்சி மன்ற தலைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து 100 நாள் வேலை திட்டத்திற்கு பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தை அறிந்த ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் ஆற்காடு கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊராட்சி மன்ற தலைவரின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட செய்தார்.